பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா

பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா
Published on
Updated on
3 min read

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், 'மாலை முரசு' நிறுவனருமான பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள 'மாலை முரசு' அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, 'மாலை முரசு நாளிதழ்' நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் கால்ஸ் குழும தலைவர் ஜி.என்.எஸ்.வாசுதேவன், மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 'மாலை முரசு' நாளிதழில் பணிபுரியும் ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக சார்பில் அக்கட்சியின் அரசியல் குழு தலைவர் அந்தரி தாஸ், மக்கள் நீதி மைய துணை தலைவர் மவுரியா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,

பத்திரிக்கை உலகின் தந்தையாக கருதப்படும் ஆதித்தனார் புதல்வன் ராமச்சந்திரா ஆதித்தனார் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை மாபெரும் கடமையாக கருதுகிறோம் என கூறினார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் கூறியதாவது,

பா.இராமச்சந்திரா ஆதித்தனாரின் 90 வது பிறந்த நாளில் தாய்மொழி தமிழை பட்டி தொட்டி எல்லாம் நாளிதழ் மூலம் கொண்டு சேர்த்தவர். அதேபோல அவரின் வழியில் ராமச்சந்திர ஆதித்தனார் செய்ததாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது,

பத்திரிக்கை உலகின் தந்தையாக கருதப்படும் ஆதித்தனார் புதல்வன் ராமச்சந்திரா ஆதித்தனார் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை மாபெரும் கடமையாக கருதுகிறோம்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது,

தமிழர் தந்தை ஆதித்தநாரின் மூத்த மகன் ராமச்சந்திரா ஆதித்தனாரின் 90 ஆவது பிறந்த நாளில் விசிக சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறோம். ராமச்சந்திரா ஆதித்தனார் பிறந்த ஊரில் தமிழக அரசு அவருக்கு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய தமிழ் தொண்டுகளை தமிழ் சமூகம் நினைவு கூறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

DD2

அமமுகவைச் சேர்ந்த சசிகலா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்ததாவது,

ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் தமிழகத்தின் நலனிற்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளையும், ஈடு இணையற்ற பங்களிப்பையும் இந்நாளில் நினைவு கூர்வோம்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com