குடியிருப்புகளில் இருந்த 9 அடி மலைப்பாம்பு...!

குடியிருப்புகளில் இருந்த 9 அடி மலைப்பாம்பு...!

Published on

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி கேசரபட்டியில் மாணிக்கம் என்பவரது குடியிருப்பு பகுதிக்குள் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைய முயன்றுள்ளது. அதனை பார்த்ததும் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் மிக லாவகமாக இடிக்கி மூலம் உயிருடன் பத்திரமாக பிடித்தனர். உயிருடன் மீட்கப்பட்ட அந்த மலைப்பாம்பை தீயணைப்புப்படை வீரர்கள் வனப்பகுதிக்குள் விட்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com