9 வயது சிறுமியை ஓட ஓட கடித்து குதறிய நாய்...பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
9 வயது சிறுமியை ஓட ஓட கடித்து குதறிய நாய்...பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!
Published on
Updated on
1 min read

அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த சிறுமியை நாய் ஒன்று கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் அவர் ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார்.  வீட்டு பக்கத்தில் இருந்த  9 வயது சிறுமியை அந்த நாய் கடித்து குதறியதுள்ளது.இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதுகாவலர்கள் அந்த நாயை துரத்தியதால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம்  பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com