ஆதரவற்ற குழந்தைகளை பெல்டால் தாக்கிய நிர்வாகி..! நெஞ்சை உலுக்கும் வீடியோ ஆதாரம்..!

அந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அதன் காப்பக நிர்வாகி மற்றும் ஒரு பெண் ஆகியோர் சேர்ந்து பெல்டால் அடிக்கும்...
care taker attacking child
care taker attacking child
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் தனியார் ஆதரவற்ற குழந்தைகளுக்கான  காப்பகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் அன்னூர் கோவில்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப்  பகுதிகளை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் இங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்..

இந்த நிலையில் அந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை காப்பகத்தில் உள்ள நிர்வாகி மற்றும் ஒரு பெண் ஆகியோர் சேர்ந்து பெல்டால்  அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஆதரவற்ற குழந்தைகளை சித்திரவதை செய்யும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்....

கோவை அருகே தனியார் காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து  உள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com