
கோவையில் அனுமதியின்றி பேரூராட்சி அலுவலகத்துக்குள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்ததாக கூறி 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூலுவபட்டி பேரூராட்சியில் பாஜக தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் அனுமதியின்றி அலுவலகத்துக்குள் சென்று பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
இதற்கு பேரூராட்சி செயலாளர் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜக மற்றும் செயல் அலுவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில், அத்துமீறி நுழைந்து புகைப்படம் வைத்தது மற்றும் முககவசம் அணியாமல் கும்பலாக வந்தது போன்ற பிரிவுகளில் 10 பேர் மீது ஆலாந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.