
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் உள்ள கெமிக்கல் பேரல் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவுவதை கண்ட ஊழியர்கள், இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீயின் மீது, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த ஊழியர் ஒருவரை தீயணைப்பு படையினர் மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.