தொண்டர்களின்றி வெறிச்சோடிய ஓபிஎஸ் வீடு...!

தொண்டர்களின்றி வெறிச்சோடிய ஓபிஎஸ் வீடு...!
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்த நிலையில் கட்சித் தொண்டர்கள் இன்றி ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு வெறிச்சோடி காணப்பட்டது. 

உச்சநீதிமன்றத்தில் தற்போது வெளியான தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாதகமாகவும் தீர்ப்பு வெளியான நிலையில் ஓபிஎஸ் வீடு வெறிச்சோடி காணப்படுகிறது.  ஓபிஎஸ் பொதுவாக பெரியகுளம் வரும்போது 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், மற்றும்  கட்சி நிர்வாகிகள் அவர்கள் வீட்டின் முன்பு காத்திருந்து சந்திப்பது வழக்கம்.

ஆனால் இன்று தீர்ப்பு வரவிருந்த நிலையில் காலையில் இருந்தே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவர்கள் வீட்டு முன்பு இல்லாத சூழலில் வீட்டிற்கு வெளியே வெறிச்சோடி காணப்படுகிறது.  தற்போது ஓபிஎஸ்க்கு வழக்கமாக பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை மட்டுமே தற்போது வீட்டின் வெளியே உள்ளனர்.  

இந்த சூழலில் ஒ.பன்னீர்செல்வம் அவரது வீட்டில் இருந்தவாறே தொலைக்காட்சியில் தீர்ப்பை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேல் நடவடிக்கை குறித்து அவர் அலைபேசி மூலமாக கட்சி மேல் மட்ட நிர்வாகிகளிடமும் வழக்கறிஞர்களிடமும் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com