
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் தென்னை மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென தென்னை நார்களில் தீ பற்றியது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் என்பதால் தீ மளமளவென ஆலை முழுவதும் பரவி சுமார் ஆயிரத்து 500 டன் தென்னைநார் பற்றி எரிய தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினா் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.