பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்...போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்...போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளி மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. 


அரசு பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்காக பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆனாலும், அவர்களை ஏற்ற மறுப்பது, உரிய நிறுத்தத்தில் இறக்காமல் செல்வது என தற்போது வரை தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சீருடைகளில் வரும் போது, பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்றும்,  புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் வழங்கும் பணிக்கான கால அளவை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்தினர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com