சென்னை மாநகராட்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி : மக்களை தேடி மேயர்!!!!

சென்னை மாநகராட்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி : மக்களை தேடி மேயர்!!!!
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் மேயர் பிரியா வரும் மே 03 -ம் தேதி இராயபுரம் மண்டலத்திற்க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டார அலுவலகத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நேரடியாகப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் “மக்களைத் தேடி மேயர்” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக “மக்களைத் தேடி மேயர்” திட்டமானது ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வரும் மே 03-ம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.

அன்றைய தினம் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com