ஒரு நாயகன் உதயமாகிறான்... மீண்டும் உதயநிதி.. மகிழ்ச்சியில் திளைக்கும் திமுக இளைஞரணி..!

தன் தாத்தா கருணாநிதி, அப்பா மு.க.ஸ்டாலின் போல கலைத்துறையிலும் தடம் பதித்தவர் தான் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு நாயகன் உதயமாகிறான்... மீண்டும் உதயநிதி.. மகிழ்ச்சியில் திளைக்கும் திமுக இளைஞரணி..!
Published on
Updated on
1 min read

மீண்டும் இளைஞரணி செயலாளர்

திமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உட்கட்சி தேர்தல் நடைபெற்று, வட்டம், பகுதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்துக்கப்பட்டனர். அப்போது இரண்டாவது முறையாக  மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினும் திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரணி துணை செயலாளர்களாக ஜோயல், ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பனும், திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்து வந்த பாதை 

தமிழ்நாடு அரசியல் ஆளுமைகளில் பெரும்பாலானோர் திரைத்துறையை சார்ந்தவராகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் தன் தாத்தா கருணாநிதி, அப்பா மு.க.ஸ்டாலின் போல கலைத்துறையிலும் தடம் பதித்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். திரைப்பட விநியோகஸ்தராக கோலிவுட்டில் கால் பதித்து, பின்பு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உதயமானார் உதயநிதி. 

கடந்த ஜூலை 2019 ஆம் ஆண்டு முதன்முதலாக திமுகவின் இளைஞரணி செயலார்களாக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடந்த லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரங்கள் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

எம்.எல்.ஏ அவதாரம்

இதனையடுத்து கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதே தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ அவதாரம் எடுத்தார் உதயநிதி ஸ்டாலின்.

கலைஞருக்கு பேரனாகவும், மு.க.ஸ்டாலினுக்கு மகனாகவும் இருப்பதே தேர்தலில் போட்டியிட போதுமான தகுதியா? என்று எதிர்கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தன் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெற செய்த தனது தொகுதி மக்களுக்காக யாரும் எதிர்பாராத அளவுக்கு களப்பணிகளை ஆற்றி எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கினார் உதயநிதி ஸ்டாலின் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

-அறிவுமதி அன்பரசன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com