“பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் உருவாக்கிடுக” - OBC பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு.

“பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் உருவாக்கிடுக”  - OBC பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு.
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கூறுகையில்:

பிற்படுத்தப்பட்டோரின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் குறிப்பாக ஜாதி வாரி கணக்கெடுப்பு 1931 க்கு பிறகு முழுமையாக நடத்தப்படவில்லை எனவும்,

மற்றும்,  பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு தனி அமைச்சகம் உருவாக்கிட வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் என்னும் கிரிமினிலேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான  உயர் ஜாதியினரின் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

 மேலும் வரும் நாட்களில் மாநிலம் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தி பின்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக  தெரிவித்துள்ளார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com