ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கம்: ஜப்பானிற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை! இந்தியாவிற்கு ஆபத்து உண்டா!!?

2011 ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் மிக சக்தியானது ..
huge earth quake of rusisa
huge earth quake of rusisa
Published on
Updated on
1 min read

 ரஷ்யாவின் கம்சாட்ச்கா பெருங்கடல்  தீவுக்கரைப்பகுதியில் 8.8 ரிக்டர்  அளவிலான மிகப் பெரும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரஷ்யாவின் 1952-ஐவிட மிகப்பெரும் நிலநடுக்கங்களில் ஒன்று என்றும், உலகளவில் 2011 ஜப்பானில் ஏற்பட்ட  நிலநடுக்கத்திற்குப் பின்னர் மிக சக்தியானது என்றும் சொல்லப்படுகிறது

ஆனாலும் பல இடங்களில் கடல் உள்வாங்கியுள்ளது,தற்போது நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வரப்படுவதாகவும் ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது, மேலும் ஹவாய் துறைமுகத்தில் உள்ள அனைத்து வணிக கப்பல்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் Severo‑Kurilsk பகுதியின் கடற்கரையில் 4 மீட்டர் (13 அடி) வரைக்கும் உயரமான அலைகள் மேலெழும்பியுள்ளது, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாயின் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகள்! 

ரஷ்யாவின் சகின் மாகாணத்தில் உள்ள வட குரில்ஸ் தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் முழுவதுமாக  சுனாமி அலைகள் புகுந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் ரஷ்யாவின் சகாலின் தீவில் மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசு திவித்திருக்கிறது.

ரஷ்ய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சீனாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. ல சீனாவின் சில கடலோரப் பகுதிகள் பாதிக்கபடலாம் என்றும் 30 செமீ முதல் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழலாம் என அந்த நாட்டின் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனீசியாவிலும் சுனாமி அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தல்  பசிபிக் முழுவதும் அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.  அதே நேரத்தில் ஹவாய்  சுனாமி கண்காணிப்பில் வைக்கப்பட்டது. ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது,  பசிபிக் கடற்கரையில்  3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

சுனாமிகள் மீண்டும் மீண்டும் தாக்கும். எச்சரிக்கை நீக்கப்படும் வரை கடலுக்குள் நுழையவோ அல்லது கடற்கரையை நெருங்கவோ வேண்டாம்" என்று ஜப்பானிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை உண்டா!?

ரஷ்யாவில் ஏற்பட்ட  நிலநடுக்கம் தொடர்பாக இந்தியாவுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் சுனாமி அபாயம் இல்லை, என இந்திய சுனாமி எச்சரிக்கை ஆய்வு தந்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com