
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.
விஜய் கட்சி துவங்கிய நாளிலிருந்தே அவருக்கான ஆதரவும், ரசிகர் கூட்டமும் பெருகி வழியத்துவங்கியது. விஜய் சில முக்கியமான இடங்களில் அரசியல்வாதியாக கோட்டை விட்டாரா? என்றால், ஆம் உண்மைதான். அதற்கு காரணம் அவர்கள் புதியவர்கள் அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள், மேலும் அரசியல்மயப்படாத தொண்டர்களை வைத்திருப்பவர்கள். ‘தவறி ஒரு முறை செய்தால் தான் அது தவறு.. மீண்டும் மீண்டும் செய்தால்..” அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் 41 -உயிர்கள் பலியானது என்ற உண்மையை இனி யாராலும் மாற்ற முடியாது. ஆனாலும் மக்கள் விஜய் மீது அதிகளவிலான வெறுப்புணர்வை உமிழவில்லை என்றுதான் தோன்றுகிறது. மேலும் இன்னமும் விஜயை பின்தொடரும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவே அவரின் மிகப்பெரும் பலம்.
திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய பெரும் தவறுகளை செய்துள்ளது. ஆட்சி அமைத்ததிலிருந்து, ஊழல், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள், காவல் மரணங்கள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக திமுக -வின் இமேஜை வெகுவாக உடைத்த ஒரு நிகழ்வு என்றால் அது ‘தூய்மை பணியாளர் போராட்டம் தான்” சென்னை திமுக -வின் கோட்டை என்று அறியப்படும் பகுதியாகும்.ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் திமுக மீதான தங்கள் வெறுப்பை வாக்குகளில் காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பதுதான் மற்ற கட்சிகளின் பிரதானமான எண்ணமாக உள்ளது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போதே சூடாகியுள்ளது. ஏனென்றால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் கோவில் அருகே உள்ள தனியார் அரங்கில், செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கான அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார்.
கூட்டம் முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையை, திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள் கூட்டணி உத்திகளைப் பற்றி புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. தேர்தல் களத்தில் கூட்டணி அமைப்பு குறித்து தினகரன் தெளிவுபடுத்தினார்.
2026 பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. விஜயின் தலைமையிலான கூட்டணியுடன் சேர்த்து 4 முனை போட்டி அமையும். எங்கள் தலைமையில் கூட்டணியா அல்லது வேறொரு கூட்டணியில் இணைவோமா என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப விஜயை கூட்டணிக்கு அழைப்பதைப் பார்த்தால், தங்களால் தனித்து நிற்க முடியாது என்பதால் அழைப்பு வருவதாக தெரிகிறது. எதிர்பாராத வகையில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தலுக்கு முன்னதாக, திமுக அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அது மட்டும்தான் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேற்றினால் மட்டும்தான் தேர்தலில் மக்களைச் சந்திக்க முடியும்" என்று கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.