2026 நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் தேதி (ஏப்ரல் 23) அறிவிக்கப்பட்டவுடன் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதனையடுத்து விருப்ப மனு வழங்குதல், வேட்பாளர்கள் நேர்காணல் மற்றும் கூட்டணி தொகுதி பங்கீடு போன்றவையால் தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா தொடங்கியது.
தமிழகத்தில் இந்த தேர்தல் நான்குமுனை போட்டியாக இருக்க கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவி வருகிறது. அதையடுத்து தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்றும் அதற்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருவதாகம் தெரிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். நாளை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதாக தெரிவித்திருந்த நிலையில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தவெகவில் ஒரு முக்கிய நபர் இணைவதாக தெரிவித்திருந்தார். அவர் யார் என்று பலரும் எதிர்பாத்திருத்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஒரு அறிக்கை வெளியாகி ஒரு துருப்பு கொடுத்தது.
புதன்கிழமை அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து டி.செல்வம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடை நீக்கத்திற்கான காரணமாக, கட்சி ஒழுக்கத்தை மீறும் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முறையான விசாரணை முடியும் வரை இந்த இடைநீக்கம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சமீப காலமாக டி.செல்வம், விஜ்ஜயின் தவெக-வுடன் நெருக்கம் அடைந்ததாகக் கூறப்படுவதை அடுத்து , புதிதாக தொடங்கப்பட்ட கட்சியில் அவர் இணையக் கூடும் என்ற செய்திகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் தவெக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களுக்காக செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும் தெரிகிறது. இதனையடுத்து “திமுகவின் ஊதுகுழலாக மாறிய செல்வாபெருந்தகை” என்று விமசித்துள்ளார் டி செல்வம். இன்று பிற்பகல் 3 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் டி.செல்வம் தவெக வில் அதிகாரபூர்வமாக இணைந்தார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.