துறை முருகனின் அரசியல் வாழ்வு அவ்வளவுதானா..!? திமுக -வில் நிகழும் அதிரடி மாற்றம்…இதுதான் பின்னணியா..!?

துரைமுருகனுக்கு 86 வயதாகிறது, மேலும் அவரது உடல்நிலையும் முன்பு போல் இல்லை என சொல்லப்படுகிறது. அவர் ஏற்கனவே ...
Durai Murugan
Durai Murugan
Published on
Updated on
1 min read

வருகிற 2026 -தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் முக்கிய பொறுப்புகளை நிறைப்பது. சிக்கலான நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து நீக்குவது, கட்சியில் மாற்றம் கொண்டுவருவது என பல வேலைத்திட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் திமுக -வும் தனது கட்சியில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை துவங்க உள்ளதாக தெரிகிறது. அது என்னவென்றால் திமுக -வின்  பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக -வின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக தி.ஆர் பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னணி என்ன?

திமுக சித்தாந்த எதிர்ப்பு நாளிதழான தினமலர் வெளியிட்ட செய்தியில் தான் துரைமுருகனின் மாற்றம் சார்ந்து குறிப்பிடப்பட்டடுள்ளது. அதற்கு முன்பு ஒரு முக்கிய நிகழ்வு திமுக -வில் நடந்தது அதுவும் இந்த பரபரப்பு பேச்சுக்கு ஒரு முகாந்திரமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனியறை ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே  துரைமுருகனுக்கு தனியறை அளிக்கப்பட்டதை போலவே கனிமொழிக்கும் தனியறை வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனிமொழிக்கு வழங்கப்படும் முக்கியத்துவமே துரைமுறைகனின் மாற்றத்திற்கான அடிப்படை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உடல்நிலை தான் காரணமா..!?

துரைமுருகனுக்கு 86 வயதாகிறது, மேலும் அவரது உடல்நிலையும் முன்பு போல் இல்லை என சொல்லப்படுகிறது.  அவர் ஏற்கனவே இதய நோயாளி எனவே முப்பு போல அவரால் செயல்பட முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்தது. முழு வீச்சோடு வருகிற தேர்தலில் அவரால் பங்கெடுக்க முடியாது எனவே அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம். அதையும் திமுக தலைமை இன்னும் அதிகாரபூர்வமாக  அறிவிக்கவில்லை. ஓய்வு வழங்குவதற்கும் ஒதுக்குவதற்கும் பெரும் வித்யாசம் இருக்கிறது என திமுக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com