வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும்..! - அரசாணை வெளியீடு.

வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும்..! -  அரசாணை வெளியீடு.
Published on
Updated on
1 min read

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை சீரமைத்து வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வருவாய் வட்டத்தினை சீரமைத்து புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் ரூபாய் 7.56 கோடி செலவில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை சீரமைத்து வடப்பொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய நான்கு குறுவட்டங்களுடன் 85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வாணாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வாணாபுரம் வருவாய் கட்டிடமாக உருவாக்கப்படுகிறது.

புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 44 பணியிடங்களில், 11 பணியிடங்கள் மறுபரவலமர்த்தல்  அடிப்படையில் 33 பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது  என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com