ஆளுநரை தபால்காரராக சித்தரித்து போஸ்டர்; பொள்ளாச்சியில் பரபரப்பு!

ஆளுநரை தபால்காரராக சித்தரித்து போஸ்டர்; பொள்ளாச்சியில் பரபரப்பு!

Published on

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிக்கும் விதமாக பொள்ளாச்சி நகர திமுகவினர் அவரை தபால் காரராக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதால் பெள்ளாச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் R.N.ரவி சென்றிருந்தார். அதனை முடித்து விட்டு பொள்ளாச்சி வழியாக பழனி செல்வது திட்டமாக இருந்தது.

இதனையடுத்து அவருக்கு எதிரிப்பு தெரிவிக்கும் விதமாக பொள்ளாச்சி நகர தி.மு.க.வினர் சார்பில் 
கெட் அவுட் ஆர் என் ரவி என்ற தலைப்பில் தபால்காரர் போன்ற சீருடையில் ஆளுநர் உருவம் பதித்து
திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனால் பொள்ளாச்சி பகுதியில் இன்று அதிகாலை முதலே பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வசந்த ராஜன் மற்றும் பொள்ளாச்சி நகர செயலாளர் பரமகுரு தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய திமுக நகர செயலாளர் நவநீதன்  மீது நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளித்தனர்.

ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்குக் கோரி நடைபெற்ற உண்ணாவிரத்தில் ஆளுநரை தபால்காரர் என்று விமர்சித்த நிலையில் இந்த போஸ்டர் அரசியல் திமுக ஆளுநர் இடையேயான மோதல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com