"ஆட்சிக்கு வந்த நீ என்ன செய்யப்போற?" ஒருமையில் பேசிய ஆ. ராசா! 'சோபா செட் டப்பாக்கள்' என்றும் விமர்சனம்

இப்படி பேசுகின்ற யோக்கியதை உங்களுக்கு அல்ல, முதலமைச்சரே உங்களிடம் இருக்கின்ற எந்த சோபா செட்டு டப்பாக்களுக்காவது இந்த வரலாறு தெரியுமா?.
DMK MP A Raja
DMK MP A RajaDMK MP A Raja
Published on
Updated on
1 min read

சென்னை சைதாப்பேட்டையில் உரையாற்றிய திமுக MP ஆ. ராசா முதல்வருக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து பேசியுள்ளார். இன்றுடன் சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் இதனைத்தொடர்ந்து ஆ. ராசாவும் சைதாப்பேட்டையில் முதல்வர் விஜயை கடுமையாக சாடியுள்ளார்.

அன்று ஸ்டாலின் சார் என்று சொல்லிவிட்டு இன்று டெல்லியை பற்றி ஒருவார்த்தை கேட்க தைரியம் உண்டா?. அண்ணாவால், பெரியாரால், கலைஞரால் அதன் பின்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாமனிதர்களுக்கு பின்னல் நின்று கொண்டு நாங்கள் மொழிக்காக போராடுகிறோம். இப்படி பேசுகின்ற யோக்கியதை உங்களுக்கு அல்ல, முதலமைச்சரே உங்களிடம் இருக்கின்ற எந்த சோபா செட்டு டப்பாக்களுக்காவது இந்த வரலாறு தெரியுமா?. தமிழ்நாட்டின் முதலமைச்சர் பாசிசத்தை எதிர்ப்பது உண்மையாகி இருந்தால் பாசாங்கு செய்யாமல், நடிக்காமல், கேமராவுக்கு முன்னால் நிற்பதாக எண்ணிக் கொள்ளாமல், தமிழ்நாட்டின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டுமானால் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி நீங்கள் தீர்மானம் எடுக்க தயாரா? என்று ஆவேசமாக பேசினார்.

"முந்தைய ஆட்சியையே குறை சொல்லிக்கொண்டு.. குறை சொல்லித்தானே ஆட்சிக்கு வந்த, ஆட்சிக்கு வந்த நீ என்ன செய்யப்போற?" என்று மேடையில் ஒருமையில் பேசினார் ஆ. ராசா.ஆட்சிக்கு வந்தபின்பு பாசிசத்தை எதிர்த்து என்ன செய்ய போகிறாய்? என்று பேசினார். மேலும், சாதி ஓட்டுக்காக பெரியார், காமராஜர் உள்ளிட்டோரை கொள்கை தலைவர்களாக வைத்துள்ளது தவெக. மேலும், "எங்கள் கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் ஒரு தேர்தல் வந்துவிட கூடாது என்பதற்காக உங்களிடம் அனுப்பிவைத்தோம். குடியரசு தலைவர் ஆட்சி அமைந்துவிட கூடாது என்பதற்காக அவர்களை 'அமைச்சர்களாக ஆக்கியுள்ளோம்' என்று மார்தட்டி கொள்ளாதீர்கள். அமைச்சர்களாக ஆக்குவதற்கு உங்களுக்கும் வெட்கமில்லை. அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கும் அவர்களுக்கும் வெட்கமில்லை. அரசியல் வெட்கம் இல்லாத இரண்டு பேர் சேர்ந்து கொண்டு ஆட்சி நடத்துகிறீர்கள் என்றால் நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று திமுக MP ஆ. ராசா தவெக-வை கடுமையாக சாடியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com