தவெக அரசை ‘சர்க்கஸ் கூட்டம்’ என விமர்சித்த உதயநிதி! “நின்றால் கைது.. நடந்தால் கைது.. பேசினால் கைது! மோசமான பாசிச அரசு என சாடல்

ஒரு போஸ்ட் போட்டால் கைது என்று ஒரு மோசமான பாசிச அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது
Udhayanidhi Stalin speech
Udhayanidhi Stalin speech
Published on
Updated on
1 min read

சென்னையில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணியினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில் அவர், "தமிழ்நாடே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு வந்தது. தமிழ்நாடுமட்டும் இல்லை இன்று அந்த ஆட்சியில் அமர்ந்திருக்க கூடிய அந்த 'சர்க்கஸ் கூட்டமே' எதிர்பார்க்காத தேர்தல் முடிவினை தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள், அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்" என்று தவெக அரசினை விமர்சித்து பேசினார். மேலும், இந்த 'சர்க்கஸ் கும்பல்' ஆட்சிக்கு வந்த பிறகு நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது, சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்ட் போட்டால் கைது என்று ஒரு மோசமான பாசிச அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று உதயநிதி தவெக அரசினை சாடி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு தன்னையும் கைது செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டார். டம்மி முதலமைச்சர் என்று முதல்வரை பார்த்து தஞ்சாவூரில் காவிரி விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசியதை குறிப்பிட்டார். ஆனால் அதனை தவெக-வினர் ஏற்றுக்கொண்டதாகவும், அதற்கு எந்த ரியாக்சனும் இல்லை. கேடுகெட்ட அரசு அமைத்திருக்கிறது, ஒரு வெட்கம் கேட்ட அரசு அமைத்திருக்கிறது என்று கூறியதாகவும் ஆனால் அதற்கெல்லாம் கைது செய்யவில்லை. காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்று கூறியதற்கு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தன் மீது தொடுக்கப்பட்ட கைது நடவடிக்கை குறித்து நிகழ்ச்சியில் பேசினார்.

தான் கைது செய்யப்பட்டது ஒரு காமெடி என்றும் அந்த கைது ஒரு ஜாலியான ட்ரிப் போன்று இருந்ததாகவும், மக்கள் வரிப்பணத்தில் தனக்கு செலவில்லாமல் ஒரு ரோடு ஷோ நடத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசியது அந்த நிகழ்ச்சியில் சிரிப்பலையை உண்டாக்கியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com