கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக, வெள்ளி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே நல்லமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் மற்றுமம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி அருவியில் கனமழை காரணமாக, தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வெளியில் செல்ல முடியாத நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.