மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக " Among the stars " எனும் குறும்படம் திரையிடப்பட்டது.
சர்வதேச அறிவியல் தினத்தில் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னை நுங்கபாக்கத்திலுள்ள தனியார் விடுதி திரையரங்கில் " Among the stars " எனும் குறும்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. அப்போது மாணவர்களுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு படத்தை பார்த்தார்.
இதையும் படிக்க : திரைத்துறையில் யுவனின் 26 வருடம்...இணையத்தில் வைரலாகும் ஹேஸ்டேக்...!
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், சர்வதேச அறிவியல் தினத்தில் மிகவும் அழகான ஒரு திரைப்படத்தை காட்சி படுத்தியிருப்பதாகவும், இனிமேல் தமிழக பள்ளிக் குழந்தைகளுக்கு ஹாலிவுட் தரத்தில் இது போல படங்களை அதிகமாக கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி வகுப்பறையில் வாங்குகின்ற மதிப்பெண்களை மட்டும் வைத்து மாணவர்களின் திறமையை அளவிடமுடியாது, தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், விரைவில் நீட் பயிற்சி ஹைட் டெக் ஆப் மூலமாக கொண்டு வரப்படும் எனவும், முதலமைச்சருடன் ஆலோசித்து நிதி நிலை சரியானதும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.