பத்தாம் வகுப்பில் படிக்கும் போதே காவல் அதிகாரியை தாக்கும் துணிச்சல்;எங்கே போகிறது தமிழ்நாடு? -இராமதாசு கேள்வி

பத்தாம் வகுப்பில் படிக்கும் போதே காவல் அதிகாரியை தாக்கும் துணிச்சல்;எங்கே போகிறது தமிழ்நாடு? -இராமதாசு கேள்வி
Published on
Updated on
1 min read

கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க மூன்று இலக்க இலவச தொலைபேசி  எண் அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பத்தாம் வகுப்பில் படிக்கும் போதே கஞ்சா, மது போதையில் காவல் அதிகாரியை தாக்கும் துணிச்சல் மணவர்களுக்கு எங்கே இருந்து வருகிறது என்றும், எங்கே போகிறது தமிழ்நாடு? என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தண்டையார்பேட்டையில் ஐயத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த  சிறுவர்களை விசாரித்த  காவல் உதவி ஆய்வாளர், அந்த சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.  

மது மற்றும் கஞ்சா போதை தான் காவல் அதிகாரியையே தாக்கும் துணிச்சலை  அவர்களுக்கு தந்திருக்கிறது என்று கூறியுள்ள அவர், தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்துவதோடு, கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்களை ரகசியமாக வைக்கப்படுவதுடன் அவர்களுக்கு வெகுமதியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க மூன்று இலக்க இலவச தொலைபேசி  எண் அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com