
தமிழகத்தின் தென் மாவட்டத்தில் பிறந்த ஒருவர் வாழ்வின் எல்லா மோசமான விஷயங்களையும் சந்தித்த பிறகும்,இனி வாழ்வதால் ஒரு பயனும் இல்லை என்ற முடிவுக்கு போன பின்னரும்… தந்து வாழ்வை மீட்டெடுத்து “வாழ்ந்தா இவர் போல வாழணுங்கிற அளவுக்கு நம்மை எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறார்.
விருதுநகரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் குகன், விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு 2 அக்கா மற்றும் ஒரு தம்பி. விவசாய கூலிகளான இவரது பெற்றோர் தனது 4 பிள்ளளைகளுக்கும் படிப்பை மட்டும் எப்படியாவது வழங்கிவிட வேண்டும் என்று நினைத்து. நான்கு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தனர். தனது முதல் இரண்டு மகள்களுக்கும் தரமான உயர்கல்வியை கொடுத்தால் தம்பிகள் இருவரையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் முதல் மகளை மருத்துவராகவும், இரண்டாவது மகளை பேராசிரியராகவும் ஆக்கினர் குகனின் பெற்றோர். மகள்கள் வேலைக்கு செல்ல துவங்கியதும் தங்களது வறுமை பறந்தோடிவிடும் என்று நினைத்திருந்த பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
மகள்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 2 மாதங்கள் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் மூன்றாவது மாதத்திலேயே உடன் பணிபுரியும் சக மருத்துவரை காதலிப்பதாகவும் உடனே அவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்கவும் கோரியுள்ளார், வாங்கிய கடனையே இன்னும் அடைக்காத நிலையில் திருமணத்திற்கு மேலும் பணத்திற்கு எங்கு போவது என பெற்றோர் திகைத்து நின்றனர், “ இவரை விட்டால் இது போன்ற சம்பந்தம் கிடைக்காது, அவர்கள் ஏற்கனவே பணக்காரர்கள் நான் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் கேட்கப்போவதில்லை, திருமணம் ஆனாலும் எனது சம்பளத்தை நமது வீட்டுக்கே தருவேன் என பல உறுதிமொழிகளை அடிக்கியுள்ளார்” இதை நம்பிய பெற்றோர் மகளின் ஆசைக்காக தங்களிடம் இருந்த அனைத்தையும் விற்று மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கல்யாணம் ஆகி போன நாளிலிருந்து மகள் வீடு பக்கமே வரவில்லை, போன் செய்தாலும் வேலை பளு அதிகமா இருக்கிறது என்று ஏதேனும் காரணம் சொல்லி அலைக்கழித்துள்ளார். நிலைமையை சித்தரிக்கும் முன்னரே 2 -ஆவது மகள் “தற்போது நீங்கள் இருக்கும் சூழலில் நான் நினைத்த வாழ்வை உங்களால் எனக்கு அமைத்து தர இயலாது நானே எனக்கான வழக்கையி தேடி போகிறேன்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரும் தனது கடமைகளிலிருந்து கைகழுவி விட்டார். மகள்களை படிக்க வைக்க முனைப்பு காட்டிய குகனின் அப்பாவால் குகனை வெறும் பாலிடெக்கினிக் கல்லூரி வரையே படிக்க வைக்க முடிந்தது. கடன் தொல்லையாலும் ஏமாற்றத்தாலும் தவித்த குகனின் அப்பா செய்வதறியாது திகைத்த போது, குகனுக்கு மலேசியாவில் ஒரு ஏஜென்சி மூலமாக ஒப்பந்த பணி ஒன்று வந்தது, ஏற்கனவே நிறைய ஏமாற்றங்களை சந்தித்திருந்த குகனின் பெற்றோர் மேற்கொண்டு பணம் கட்டி அவனை வேலைக்கு அனுப்ப முன்வரவில்லை.
தனது பெற்றோரின் வறுமையை உணர்ந்த குகன் எங்கெங்கோ சென்று உதவியை கோரினான் அவனுக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது, கடைசியாக அவனது பேராசிரியர் அவனுக்கு உதவ முன்வந்தார். அந்த உதவியை வைத்து எப்படியோ மலேசியா சென்றான் குகன், முதல் ஆறு மாதம் அவன் வாழ்வில் என்னென்னவோ நிகழ்ந்துவிட்டது, வாங்கிய கடனுக்காக கடன்காரர்கள் அவனது தம்பியை அழைத்து சென்று ஹோட்டல் வேலைக்கு வைத்துக்கொண்டனர், அவனது தாயும் தந்தையும் அவர்கள் சொந்த நிலத்திலேயே கூலி வேலை பார்த்தனர். “ஒரு நாள் மதிய வேளையில் உணவருந்திக்கொண்டிருந்த குகனின் தந்தையை இழிவாக பேசி சோற்றுவாளியை காலால் எட்டி உதைத்தான் கடன் காரன், இதனால் மனம் உடைந்த அவனது தந்தை பல நாள் பட்டினியாய் அந்த நிலத்தில் வேலை பார்த்தார், இதை எல்லாம் அறிந்து நொந்து போயிருந்த குகனுக்கு பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை கிடைத்தது, பகலெல்லாம் வேலை செய்த குகன் இரவில் அந்த பெட்ரோல் பங்கில் வேலைபார்ப்பான், “அங்குதான் ஒரு பெரும் பணக்காரரின் அறிமுகம் அவனுக்கு கிடைத்தது, அவரும் தமிழர்தான், மலேசியாவில் தனியாக ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார், இவனது கதையை கேட்ட அந்த நபர் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பரிந்துரை செய்து அவனின் படிப்புக்கு ஏற்ற வேலையையும் சம்பளத்தையும் கொண்ட ஒரு இடத்தில் அவனை அமரச்செய்தார்” - முதலில் மாதாமாதம் அவனுக்கு கணிசமான தொகை கிடைத்தது. அதை வைத்து அவனின் பெற்றோரின் கடனை அடைத்தான். அவன் கடுமையான உழைப்பாலும் திறமையாலும் அவனுக்கு அதே நிறுவனத்தில் நல்ல பதவி உயர்வும் வழங்கப்பட்டது, கிடைத்த பணத்தில் முதலில் குகன் தனது தம்பியை மீட்டான். மூன்று வருடம் கழித்து மீண்டும் இந்தியா திரும்பியபோது அவனது பெற்றோரும், இங்கையே இருந்து விடலாமே கடந்தான் அடைந்துவிட்டதே என்றனர். ஆனால் பணம் என்ற ஒற்றை சொல் தன்னையும் தன் குடும்பத்தையும் எப்படி ஆடி வைத்தது என்பதை நன்கு அறிந்திருந்த குகன், தனது தம்பியை தன்னுடனே அழைத்து சென்று அங்கிருந்த ஒரு சர்வதேச பள்ளியில் படிக்க வைத்தான்.
எந்த நிலத்தில் அவனது பெற்றோர் அவமானப்படுத்தப்பட்டார்களோ அதே நிலத்தை மீண்டும் வாங்கி அதில் தங்களுக்கென்று ஒரு நல்ல வீட்டை கட்டினான். அதன் பிறகு மீண்டும் வந்து தந்து பெற்றோரையும் அழைத்துத்துக்கொண்டு மலேசியாவுக்கே திரும்பி விட்டான்.
ஆனால் வருடம் ஒரு முறை அவர்களின் குலா தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட குகனின் குடும்பம் வரும். என்ன நடந்தாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் அந்த நாளை தவற விட மாட்டார்கள், குகன் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஊர்க்கு வருவதே திருவிழா போல இருக்கும். அந்த கோவிலில் கெடாவெட்டி கிட்டத்தட்ட 3000 -பேருக்கு உணவளிப்பான், பல ஏழைகளுக்கு அந்த நாளில் உணவு, உடைகள் வழங்குவான், அதையெல்லாம் விட அவன் செய்யும் செய்யும் முக்கிய விஷயம் பல பிள்ளைகளுக்கு கல்வி உதவி செய்வதுதான் ..ஆனால் அது பலருக்கும் தெரியாது..பெரும் துயரில் துவண்டு தந்து கடமைகளிலிருந்து ஓடிவிடாமல் வாழக்கையை போராடி வென்ற குகன் ஒரு Inspiration -தான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.