விமான நிலையத்தில் நடந்த உலக சாதனை நிகழ்வு...!

விமான நிலையத்தில் நடந்த உலக சாதனை நிகழ்வு...!
Published on: 
Updated on: 
1 min read

விமான நிலையத்தில் 3500 பேருக்கு வழங்க உணவு பொருட்கள் வரிசை அமைத்து உலக சாதனை

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையத்துடன் பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து விழிப்புணர்வு வார விழா நடத்தி வருகிறது. இந்த நிலையில் 3500 பேருக்கு உணவு பொருட்கள் கொண்ட வரிசை உலக சாதனையாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 3500 பேருக்கு அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் இருந்தன. இந்த பைகள் வரிசையாக வைக்கப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி, மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர் 3500 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கி உலக சாதனை நிகழ்த்தியதாக சான்று அளிக்கப்பட்டது. சென்னை முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இந்த உணவு பொருட்களை வழங்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com