
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் ராமர் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (25). தின கூலி வேலைக்கு செல்லும் இவர், ஆஞ்சநேயர் கோயில் பின்புறத்தின் வழியே வந்த 10 வயது சிறுமியின் வாயை மூடி, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். இந்நிலையில் அவரது பிடியிலிருந்து தப்பிய சிறுமி, உடனடியாக வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார்.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ரமேஷ்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.