சுத்துவதற்கு முன்பே...கழன்று விழுந்த போல்ட்...பிறகு நடந்தது என்ன?

சுத்துவதற்கு முன்பே...கழன்று விழுந்த போல்ட்...பிறகு நடந்தது என்ன?
Published on
Updated on
1 min read

சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ராட்டினத்தில் போல்ட் கழன்று விழுந்து இளம்பெண் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொருள்காட்சி :

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறையின் சார்பில் சென்னை தீவுத்திடலில் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் தமிழக அரசின் ஒவ்வொரு துறை குறித்த சிறப்பு அம்சங்களும் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்களை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், பெண்களையும், சுட்டீஸ்களையும் கவரும் வகையில் கடைகளும் அமைப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து வருகை தந்து பொருட்காட்சியை ரசித்து செல்கின்றனா்.

போல்ட் கழன்று விழுந்து பெண் காயம் :

இந்நிலையில் நேற்றைய தினம் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, பொருள்காட்சிக்கு திரளான மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டினத்தை ஊழியா் ஒருவர் இயக்க முற்பட்டபோது, ராட்டினத்தில் பொருத்தப்பட்டிருந்த போல்ட் ஒன்று கழன்று விழுந்துள்ளது. இதில் இளம்பெண் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை :

நல்லவேளையாக ராட்டினம் இயக்குவதற்கு முன்பே போல்ட் கழன்று விழுந்ததால் ராட்டினம் இயக்குவதை நிறுத்தி பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசாா் ராட்டினம் இயக்கியவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com