சரியாக பணிகளை செய்யாத அதிகாரிகளை கடுமையாக சாடிய ஆவடி மேயர்...!

சரியாக பணிகளை செய்யாத அதிகாரிகளை கடுமையாக சாடிய ஆவடி மேயர்...!
Published on
Updated on
2 min read

நாடாளுமன்ற தேர்தலில் கெட்ட பெயரை தான் வாங்கி தர போகிறீர்கள் என ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயர் உதயகுமார், அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் ஆஉகுஸ்ட் மாதத்திற்கான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில்  நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், துணை மேயர் சூரியகுமார் அதிகாரிகள் 48 வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  ஆரம்பம் முதலே  வார்டுகளில் நிலவும் குறைபாடுகளை  கவுன்சிலர்கள் அடுக்கடுக்காக முன்வைத்தி வாதத்தில் ஈடுபட்டனர். 

 குறிப்பாக 5-வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஜான் என்பவர் தனது பகுதியில் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியவர் மாமன்ற கூட்டத்தில் மட்டும் அதிகாரிகள் செய்துவிடுவதாக கூறிவிட்டு அத்துடன் அஙு வந்து பார்ப்பதே இல்லை என புகார் வைத்தார். 

மேலும்,  இன்றைய கூட்டத்திற்கு நேற்று இரவு 11 மணிக்கு மேல் தொடர்பு கொண்டு ஏதவது  Subject இருக்கா? இருந்தால் 2 Subject  சொல்லுங்க என கேட்கின்றனர். நான் தூஙுவதை விட்டு விட்டு இவர்களுக்கு பதில் கூற முடியுமா? இப்படித்தான் நிர்வாகம் இருக்கிறது என பகிரங்கமாக கூறினார்.

இது அங்கு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்தொடர்ந்து,  மாநகராட்சி மேயர் உதயகுமார் குறுக்கிட்டு பேசுகையில் அதிகாரிகளின் இந்த செயலால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கெட்டப்பெயரை தான் வாங்கித்த்ர போறீங்க என இயலாமையை வெளிப்படுத்தினார். 

மேலும், பூங்கா அமைப்பதற்கு டெண்டெர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை நடைபெறவில்லை எனவும், குறிப்பாக கட்டட அனுமதி மனுக்களை உடனடியாக தீர்வு காணாமல் பல மாதங்களாக வைத்து மனுக்களை தள்ளுபடி செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைத்தார். 

அதோடு, மின் விளக்குகள் சரிவர இல்லை, சாலை போடவேண்டாம், தாங்காது என கூறியும் சாலையை அமைத்துவிட்டு, இப்போது அந்த சிமெண்ட் இல்லை, வெறும் ஜல்லி கற்கள் மட்டுமே உள்ளது என்கிறார்கள். அதில்தான் மேயரும் பயணம் செய்கிறார்.  மாணவர்கள் விழுந்து காயம் ஏற்படுகிறது. இதை பலமுறை கூறியும் அதிகாரிகள் வருவதே இல்லை என குற்றச்சாட்டுளை அடுக்கினார்.

இதற்கு ஆதரவு அளிக்கும் போல மேயர் AE - க்கள்   Field-க்கு செல்வதே இல்லை. நான் ஏதாவது கூறினால் கூட இந்த காதில் வாங்கி இந்த காதில் விட்டு விடுகிறார்கள்; என்ன செய்வது?  இவர்கள் என அலுவலகத்தில் வந்து நிற்கிறார்கள் என வேதனையை பதிவு செய்தார். 

ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அதிகாரிகள் மீது அடுத்தடுத்து பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ஜரடியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக முதல்வர், துறை அமைச்சர், செயாலாளர் தலையிட்டு மக்கள் பணி செய்திட தடையாஅ இருக்கும் அதிகாரிகளை மாற்றி தேர்தலுக்கு வாக்கு கேட்கும் சூழலையாவது உருவாக்கித்தர வேண்டும் என கோறிக்கை எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com