இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...!

Published on

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

குமரிக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com