சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக பொதுமக்கள் மனு அளிக்க இன்று முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை புகார்களாக அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தனிப்பிரிவில் cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம் என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புகார் அளிக்க ஏதுவாக இணையதளம் செயல்பட்டு வருகிறது. மேலும், புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக பொதுமக்கள் மனு அளிக்க இன்று முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாததால் நேரடியாக முதலமைச்சரின் தனிபிரிவில் மனு அளிக்க வந்ததாகவும், மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.