மேலும், ஆட்கள் பற்றாக்குறை, பணிப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பதிவு அலுவலர்கள் 15 நாட்கள் முதல் 1 மாதங்களுக்கு மேலாக பல அலுவலகங்களில் ஆவணங்களை திருப்பி தராமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கு, கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்வதில் உள்ள காலதாமதம் தான் காரணம் என்றும், இதனால், பல அலுவலகங்களில் ஆவண பதிவு முடிந்தும் பல நாட்களாகியும் திருப்பி தரப்படுவதில்லை எனவும், இது தொடர்பாக பதிவுத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.