திமுக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்....அமைச்சர் அன்பில் மகேஷ்

திமுக கட்சியின் மீது களங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திமுக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்....அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on
Updated on
1 min read

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,

இல்லம் தேடி கல்வி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குள்  இடர்பாடுகள் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும்  ஏற்கனவே சொன்னது தான் மாண்புமிகு முதலமைச்சர் அழகாக வடிவமைத்து கொடுத்த திட்டம் தான் இல்லம் தேடி கல்வ திட்டம் என்றார்.

.மரக்காணத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசும்போது கூட இது திராவிட திட்டம் என்று பேசியிருக்கிறார்.  திராவிட திட்டம் என்று சொல்லும் பொழுதே நாங்கள் எந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல்வர் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார். அந்த வகையிலே நாங்கள் கவனத்துடன் செயல்படுத்துவோம் என கூறினார்.

திமுக கட்சியின் மீது களங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com