கொக்கைன் விவகாரம்: “என்னால இது முடியவே முடியாது..!” - நடிகர் கிருஷ்ணா சொன்ன அந்த வார்த்தை..!

என்னுடைய பழக்கவழக்கங்கள் அவருக்கு பிடிக்காததால் என்னை விட்டு பிரிந்து தனது தாயாரின் வீட்டில் வசித்து வருகிறார். ....
kollywood stars caught by using hard drugs
kollywood stars caught by using hard drugs
Published on
Updated on
1 min read

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல முன்னணி நடிகரான ஸ்ரீகாந்த், சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், என் தந்தை வங்கி அதிகாரி. நான் 9-ம் வகுப்பு வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தேன். வங்கி அதிகாரியான என் தந்தை சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் எங்கள் குடும்பமும் சென்னைக்கு குடிபெயர்ந்தது.

ஆனால்  எனது  சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்தன. அதனால் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். எனது மனைவியும் என்னுடைய பழக்கவழக்கங்கள் அவருக்கு பிடிக்காததால் என்னை விட்டு பிரிந்து தனது தாயாரின் வீட்டில் வசித்து வருகிறார். என்னை வைத்து படம் எடுத்த பிரசாந்த் என்பவர்  நடத்திய விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் வழங்கப்பட்டது. அதிலிருந்துதான் எனக்கு கொகைன் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் மன அழுத்தத்தை போக்க நான் வீட்டில் வைத்தே கொகைன் பயன்படுத்த ஆரம்பித்தேன். போதைப்பொருள் கும்பலை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவரான ஜான் ஆகியோருடன் எனக்கு நேரடி பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி கொகைன் வாங்கினேன்.

கொகைன் பயன்படுத்துவது சட்டப்படி தவறு என்று தெரியாமல், தப்புசெய்துவிட்டேன். எனது மகனும், மகளும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள். நான் இப்போது போலீசில் சிக்கியுள்ளதால், அவர்களது வாழ்க்கையும் பாழாகிவிடும் என்று அச்சமாக உள்ளது" என்று வேதனையுடன் ஸ்ரீகாந்த் வாக்குமுலம் அளித்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஸ்ரீகாந்த் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பிரதீப் குமார்  என்பவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நடிகர் கிருஷ்ணாவும் கொக்கைன் பாய்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதன் பேரில் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவரது போன் சுவிச் ஆப் ஆகி இருந்ததால் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்த கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொண்டதில்,  “எனக்கு இரைப்பை ஒவ்வாமை இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பே இல்ல .. இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாகஉம்  சிகிச்சை மேற்கொண்டு  வருகிறேன். பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து நான் போதைப் பொருள் வாங்கிச் செல்வதாக தவறான தெரிவித்துள்ளார் பிரதீப்.. " இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா மீது அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com