
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியசாமி, நடிகர் ரஜினிகாந்த், அவர் மகளின் மூலமாக தன்னை நலம் விசாரிக்கும்படி கூறியிருந்தார் எனவும், அடுத்தமுறை சென்னை வரும் போது நிச்சயமாக ரஜினிகாந்த் நேரில் சந்திப்பதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.