நடிகை விஜயலட்சுமி வழக்கில், சீமான் இன்று ஆஜர்!!
நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்காக நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சமரசம் ஏற்பட்டு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜயலட்சுமி திருவள்ளூர் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி ஆஜரானார். அவாிடம் போலீசாா் மதுரவாயல் காவல் நிலையத்தில் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சீமான் கட்சியினரும் விஜயலட்சுமி மீது புகார்களை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சீமானிடம் விசாரணை நடத்த கடந்த 9-ம் தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், செப்டம்பர் 12-ந் தேதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.