
நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது அளித்த புகாா் தொடா்பாக நடிகை விஜயலட்சுமியிடம் போலீசாா் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகாா் ஒன்றை அளித்திருந்தாா்.
இந்நிலையில் இது தொடா்பாக விசாரணை நடத்த விஜயலட்சுமி ராமாபுரம் காவல் நிலையத்தில் துணை ஆணையா் உமையாள் முன்பு ஆஜரானாா்.
அவாிடம் போலீசாா் சுமாா் 6 மணி நேரம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். விசாரணை முடிந்த பின்னா் விஜயலட்சுமி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாா்.
இந்த விசாரணையின் போது போலீஸ் நிலையத்திற்குள் போலீசார் யாரும் அனுமதிக்கப்படவில்லை உயர் அதிகாரிகள் மட்டுமே தனி அறையில் வைத்து விசாரித்தனர்.