

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு வழி ஆகிவிடும் என்பது தான் உண்மை. திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்தே பஞ்சாயத்துதான். மேலும் எடப்பாடி உள்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கததால்தான் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கழன்று விட்டனர். அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த செங்கோட்டையனின் நீக்கம். ஏற்கனவே இருவருக்கும் முரண்கள் இருந்தாலும், ‘பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். உடனே செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் விதிகளுக்கு மாறாக, செயல்பட்ட ஓபிஎஸ் உடன் சேர்ந்து தேவர் குரு பூஜைக்கு சென்றதாகக் கூறி, கட்சியில் 50 ஆண்டுகால சீனியரான செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். உண்மையில் இபிஎஸ் எப்படி சமாளிக்க போகிறார் எனும் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஒபிஸ் -ம் தனது ஆட்டத்தை தனது பங்குக்கு துவங்கினார்.இந்த சூழலில்தான், பாஜக -அதிமுக தங்களின் வலிமையை நிரூபிக்க போராடி வருகிறது. மேலும் அதிமுகவுக்கு எத்ரிறான் தங்கள் பிரச்சனையை காத்திரமாக சொல்லி வருகிறது.
இந்நிலையில் தான் தமிழக பாஜக -வின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் திமுக-வை விளம்பர மாடல் அரசு என கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லையில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்துள்ளோம் என பெருமை பேசும் முதல்வர், கடந்த அக்டோபரில் தென்காசி கூடலூர் அரசுப் பள்ளிக்குப் புதிய கட்டிடத்தில் அடிப்படை இல்லை, மரத்தடியில் மாணவர்கள் பயின்றனர். வசதிகள் இல்லை. கடைசிநேர தேர்தல் நேரத்தில் கணக்கு கமிஷனுக்கு காட்டவும் கஜானாவை வழித்தெடுக்க மட்டுமே திட் டங்கள் தொடங்கி வைக்கப் படுகின்றன என்பதற்கு சாட்சி
'பொருநையைப் போற்றுகிறேன்' என்னும் போர்வையில் போட்டோ ஷுட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி, அரைகுறையாக நான்கு திட்டங்களைத் தொடங்கி வைத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வெற்றுத் தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு தமது விளம்பர மோகத்தாலேயே வீழும் நாள் நெடுந்தூரமில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.