கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் மா.சு

கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்டெல்லி புறப்பட்டார். 
கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு:  டெல்லி புறப்பட்டார் அமைச்சர் மா.சு
Published on
Updated on
1 min read

கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்டெல்லி புறப்பட்டார். 

புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே 850 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது கூடுதலாக 800 இடங்கள் ஒதுக்கீடு செய்து மொத்தமாக 1650 இடங்களாக உயர்த்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறேன்.

மேலும் தமிழகத்தில் கோவக்ஸின் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணை போதிய அளவில் கையிருப்பில் இல்லை அதனை கூடுதலாக ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறோம். அதேபோல நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசி இலக்கை செலுத்தியுள்ள நிலையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் இன்று பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது அதிலும் கலந்து கொள்ள உள்ளேன் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com