அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு...!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு...!
Published on
Updated on
1 min read

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 

மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ளும்படி அமலாக்க துறையினர் தாக்கல் செய்த மனு மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் இவ்வழக்கு விசாரணை ஆக.23ம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த 2001 - 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக மனுதாரர்களுடன் இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 90% முடிவடைந்துள்ளதால் இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என அன்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமலாக்க துறையின் மனு மீது இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது இந்த வழக்கு சம்பந்தமாக அவரது மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். 

அமலாக்கத்துறை சார்பில் யாரும் ஆஜராகாததை தொடர்ந்து, இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆகியோர் ஆஜரானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் செப். 12ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com