

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெற்றி பெற்றுள்ளார். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது 69,549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1989, 1991, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு நான்கு முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அனைத்து முறையும், அவரது தொகுதி எடப்பாடி தொகுதியாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காலை முதல் அதிமுக 60 தொகுதிக்கு மேல் முன்னிலை வகித்து இரண்டாவது இடத்தை தக்க வைத்தது. ஆனால் தற்போது பின்னடைவை சந்திக்க தொடங்கி 50 பிளஸ் தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது அதிமுக. கூட்டணியில் உள்ள பாஜக சட்டசபையில் 27 இடங்களில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் தோல்வியை தழுவி உள்ள நிலையில், பழனிசாமி வெற்றி பெற்றுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார்.
பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் தனது கனவை நினைவாக்கியுள்ளார் ஈபிஸ். அதிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது. பெரும்பாலான தொகுதிகளில் திமுகவிற்கான எதிர்ப்பு அலை விசியதாகவும், தவெகவிற்கான ஆதரவு திறந்தாகவும் உள்ள நிலையில் எடப்பாடி தொகுதியில் மட்டும் தனக்கு சாதகமாக காலம் கண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைப்பாரா எடப்பாடி? அல்லது அந்த இடத்திற்கு திமுக செல்லுமா? என்பதை இன்றைய முடிவுகள் சொல்லும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.