
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பை 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணம் 40 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டில் இருந்து உயர்த்தப்படும் என அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.
அதன்படி அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பை உயர்த்தி வழங்க முடிவு செய்து, அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பை 50 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.