முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை...!

முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை...!
Published on: 
Updated on: 
1 min read

தமிழக அரசின் முத்திரைப் பதிக்கும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 


சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் முத்திரைப் பதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது
நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த, 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 

குறிப்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், இக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com