சென்னை மாநகராட்சியின் பருவமழை அறிவுறுத்தல்கள் என்னென்ன?

சென்னை மாநகராட்சியின் பருவமழை அறிவுறுத்தல்கள் என்னென்ன?
Published on
Updated on
1 min read

பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 8 அறிவுரைகளை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அறிவுறுத்தல்கள்:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,  சென்னை மாநகராட்சி சார்பில் சில அறிவுறுத்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. அதன்படி, வீட்டு சுற்றுப்புறங்களை தூய்மையாக வைப்பதன் மூலம் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் இருப்பதைத் தடுக்கலாம்,

2. குடிநீரை காய்ச்சிப் பருகுவதால், மஞ்சள் காமாலை, டைஃபாய்டு, காலரா உள்ளிட்ட நோய்கள் வராமல் காக்கலாம்,

3. நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீரை சேர்த்து பயன்படுத்தலாம்,

4. உணவு, மருந்துகள், எரிபொருட்கள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும்,

5. தேங்கிய மழைநீர், சாக்கடை நீரில் குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,

6. மின்கம்பங்கள் இருக்கும் இடத்தில் தேங்கியுள்ள மழைநீரில் செல்லாமல் இருப்பதோடு, சுவர்கள் மழைநீரில் ஊறிய நிலையில் உள்ளபோது ஸ்விட்ச் போர்டு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும்,

7. குறிப்பாக மழைக்காலங்களில் காவல் துறையினர் பணிக்கு செல்லும்போது, குடை, ரெயின் கோட் மற்றும் கம் பூட்ஸ் ஆகிவற்றை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் எனவும்,

8. மழை நேரத்தில் சாலைகளில் பாதாள சாக்கடை திறந்திருக்க வாய்ப்புள்ளதால்,  எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் சென்னை மாநாகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com