
2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருக்கிறது. சமீபத்தில் இந்த வழக்கு சி.பி.ஐ -க்கு மாற்றப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில்தான் ஒரு தொகுதிக்கு 1,100 மாதிரிகளை வைத்து திமுக ரகசியமாக ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. மேலும் இந்த கருத்து கணிப்பை ‘The Print’ என்ற ஆங்கில நாளேடு செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் பிரியன் பேசுகையில், “The Print” நாளிதழ் சொல்லும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், தவெக, அதிமுக, பாஜக மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்தால் கூட திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம். அதிலும், இந்த சர்வே திமுகவின் வாக்கு வங்கி நிச்சயம் 50% எட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த கருத்து கணிப்பை நாம் ஒருவிதத்தில் உண்மை என்றே கருத வேண்டும். மேலும், கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் வாக்கு வங்கி பெருமளவில் பாதிக்கப்படவில்லை. விஜய்யின் ரசிகர்கள் விஜய் பக்கமே இருக்கின்றனர். மேலும் விஜய் தனித்து போட்டியிட்டால் 23% வாக்குகளை பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தவெக, அதிமுக, பாஜக மூன்று கட்சிகளும் சேர்ந்து 35% தான் கிடைக்கும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் திமுக -விற்கு 50% வாக்குகள் வரும் என்று சொல்ல முடியாது. கலாச்சார மரணம், அஜித் குமார் கொலை வழக்கு, கவின் படுகொலை, கிட்னி திருட்டு என ‘External factors’ திமுக -விற்கு எதிராக தான் உள்ளது. கூடவோ குறையவோ திமுக வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஆனால் நடுநிலை வாக்காளர்கள் என ஒரு 10% -பேர் உள்ளனர். அவர்களின் வாக்கு விஜய் பக்கம் போகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் ஒருவேளை அவர் NDA உடன் கூட்டணி வைத்தால், விஜய் முதல் தேர்தலிலேயே தனது நம்பகத்தன்மையை இழப்பார் அதோடு, அவரின் அரசியல் எதிர்காலமும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
ஆனால் எடப்பாடியை அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு, விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக -வின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, “விஜய் தனித்தே நிற்கட்டும், அவர் தனித்து நின்றால்தான் திமுக வசம் இருக்கும் சிறும்பான்மையினர் வாக்குகள் சிதறும்” என கூறுவதாகவும் என கூறுவதாகவும் சொல்லப்படுகிறது” என அவர் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.