ஆரம்பமானது ’அக்னி நட்சத்திரம்’ ...மீண்டும் அதிகரித்தது வெப்பத்தின் அளவு...!

ஆரம்பமானது ’அக்னி நட்சத்திரம்’ ...மீண்டும் அதிகரித்தது வெப்பத்தின் அளவு...!
Published on
Updated on
1 min read

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோடை வெயில் ஆரம்பமாகி வெளுத்து வாங்கி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த கோடை வெயில் மக்களுக்கு குளிர்ச்சியான சூழலை பரிசளித்தது. 

இந்நிலையில் அக்னி நட்சத்திர வெயில் இன்று தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிருக்கும் அக்னி வெயில் வருகிற 29ஆம் தேதி முடிவடைகிறது. இந்த காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன் மோர், சர்பத், பழங்கள் என குளிர்ச்சியான ஆகாரங்களை அதிகம் அருந்த வேண்டுமெனவும், பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே செல்லும்போது பருத்தி ஆடைகளை அணிவதுடன்,  குடைகளை எடுத்து செல்வது நல்லது என்றும் இயற்கை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே, கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது அக்னி வெயில் ஆரம்பமாகியுள்ளது மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com