அஹிம்சா மாரத்தான்...! ஜிட்டோ பெண்கள் அமைப்பினர் ஒருங்கிணைத்த நடத்தும்...!

அஹிம்சா  மாரத்தான்...! ஜிட்டோ  பெண்கள் அமைப்பினர்  ஒருங்கிணைத்த நடத்தும்...!
Published on
Updated on
1 min read

உலக அமைதியை வலியுறுத்தியும்,வன்முறையை எதிர்த்தும் கோவையில் ஜிட்டோ  பெண்கள் அமைப்பினர்  ஒருங்கிணைத்த நடத்தும்  அஹிம்சா  மாரத்தான் போட்டி  நடைபெற்றது.

உலகம் முழுவதும் 22 நாடுகளிலும் இந்தியாவில் 65-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக  அஹிம்சா மாரத்தான் ஓட்டம் பந்தயம்  நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக,கோவையில் பெண்களுக்கான எதிரான வன்முறைக்கு எதிராகவும், அமைதியை வலியுறுத்தியும்  அஹம்சா மாரத்தான் ஒட்டப்பந்தையம்  நடைபெற்றது.

முழுவதும் பெண்கள் ஒருங்கிணைந்த கோவையில் நடத்திய இப்போட்டியைக்  கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் முன்னின்று துவக்கி வைத்தனர்.

மூன்று,ஐந்து,பத்து கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற இந்த மாரத்தான  போட்டியில் ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில்  இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த இராணுவத்தினர், காவல் துறையினர்,உட்பட,வயது வித்தியாசம், ஜாதி மதம் ஆண் பெண்  என அனைவருமே எந்தவித வித்தியாசமும் இன்றி இந்த மாரத்தான் போட்டியில்  பங்கேற்றனர். 

கோவையில் நடைபெற்ற ஜிட்டோ அகிம்சா ஓட்டமானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com