எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்....

எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்....

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு
Published on

அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கடந்த அக்டோபர் 15- ம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்..அந்த அறிக்கையில், பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது

அதன் ஒரு பகுதியாக, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்ரை நினைவு கூறும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு " எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்..

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com