ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றியானது அவர்கள் செய்த முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 40 ஆயிரம் வாக்குகள் பெற்று அதிமுக பெரிய தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தல் என்பது திமுக மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகள் செய்த முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி என்றவர், ஜனநாயகத்துடன் போட்டி போட்டு பணநாயகம் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : அதிமுகவை இணைப்பது எங்கள் வேலை அல்ல - அண்ணாமலை பேச்சு!
ஆனால், இவ்வளவு முறைகேடுகளையும் தாண்டி 40 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் அதிமுக பெற்றது என்பது அக்கட்சி இன்னும் மக்கள் மனதில் உள்ளதை எடுத்துக் காட்டுவதாகவும், எனவே, இதையே நாங்கள் வெற்றியாக தான் பார்க்கிறோம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நியாயமான தேர்தலுக்குப் பயன்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.