ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி...அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி...அமைச்சர் தங்கம் தென்னரசு!
Published on: 
Updated on: 
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா காப்பாற்றி வைத்திருந்த அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு அடிமை  சாசனமாக எழுதி வைத்துவிட்டதாக கூறினார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்யாமல், கலெக்‌ஷன், கரெப்ஷன், கமிஷன் ஆகியவற்றால் அதிமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார். 

ஈரோடு தேர்தல் களத்தில் எத்தனை முகமூடிகள் அணிந்தாலும் இந்த தேர்தலோடு அதிமுக தூக்கி எரியப்படும் என்றும், இருந்த இடம் தெரியாமல் அதிமுக மறைவது உறுதி என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com