மருத்துவமனையில் அதிமுக பிரமுகர் உயிரிழப்பு: மருத்துவரின் அலட்சியம் என குற்றச்சாட்டு..!

மருத்துவமனையில் அதிமுக பிரமுகர் உயிரிழப்பு: மருத்துவரின் அலட்சியம் என குற்றச்சாட்டு..!
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவரின் அலட்சித்தால் அதிமுக பிரமுகர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(45). இவர் 21-வது வார்டு அதிமுக கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 19-ம் தேதி நள்ளிரவு நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக அன்று நள்ளிரவே செங்கல்பட்டு அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஏழுமலைக்கு வயிறு உப்பி சிறுநீர் கழிக்க முடியாமல் வயிறு வலியுடன்  அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவரிடம் ஏதாவது ஊசி போட சொல்லி ஏழுமலையின் மனைவி கூறியுள்ளார். அதற்கு மருத்துவர் நான் டாக்டரா? நீ டாக்டரா? என அலட்சியமாக பேசிவிட்டு உரிய சிகிச்சை அளிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு நேற்று  இரவு 10 மணி அளவில்  ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவர் குழுவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்சு நகர காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்த ஏழுமலை அவரது உறவினர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com